Home நாடு பக்காத்தான் ஆட்சி அமைத்தாலும் பேராக்கில் ஜசெக முதல்வர் கிடையாது

பக்காத்தான் ஆட்சி அமைத்தாலும் பேராக்கில் ஜசெக முதல்வர் கிடையாது

953
0
SHARE
Ad

பத்து பகாட் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கைப்பற்றி ஆட்சி அமைத்தாலும், அம்மாநிலத்தின் முதல்வராக தங்களின் கட்சியைச் சேர்ந்தவர் யாரும் இருக்க மாட்டார்கள் என ஜசெகவின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் உறுதியளித்துள்ளார்.

கல்வியாளர் அப்துல் அசிஸ் பாரி ஜசெக சட்டமன்ற வேட்பாளராக பேராக் மாநிலத்தில் நிறுத்தப்படலாம் என்ற ஆரூடங்களைத் தொடர்ந்து, ஜசெகவின் சார்பில் அவர் முதல்வராக நியமிக்கப்படுவார் என அம்னோ வட்டாரத்தில் தற்போது பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய விஷமத்தனமான பிரச்சாரங்களை முறியடிக்கும் விதமாகவே லிம் கிட் சியாங் மேற்கண்டவாறு இன்று ஞாயிற்றுக்கிழமை பத்து பகாட்டில் கூறினார்.

#TamilSchoolmychoice

“அசிஸ் பாரி பேராக் மாநிலத்தில் ஜசெக சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்படுவார்.ஆனால், பக்காத்தான் வெற்றி பெற்று பேராக்கில் ஆட்சி அமைத்தாலும், மாநில மந்திரி பெசார் பதவிக்கு நாங்கள் கோரிக்கை வைக்க மாட்டோம்” என லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.