Home நாடு ஜசெக: சார்ல்ஸ் சந்தியாகோ, கணபதி ராவ், ரிஷ்யாகரன் மீண்டும் சிலாங்கூரில் போட்டி

ஜசெக: சார்ல்ஸ் சந்தியாகோ, கணபதி ராவ், ரிஷ்யாகரன் மீண்டும் சிலாங்கூரில் போட்டி

1105
0
SHARE
Ad
கிள்ளான் ஜசெக வேட்பாளர் சார்ல்ஸ் சந்தியாகோ

கோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை (22 ஏப்ரல் 2018) அறிவிக்கப்பட்ட சிலாங்கூர் மாநிலத்திற்கான ஜசெக வேட்பாளர் பட்டியல்படி பூச்சோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு கோபிந்த் சிங் டியோவும் கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்கு சார்ல்ஸ் சந்தியாகோவும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

பெட்டாலிங் ஜெயா உத்தாரா என்ற பெயர் கொண்ட நாடாளுமன்றத் தொகுதி தற்போது டாமன்சாரா எனப் பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்தத் தொகுதியில் டோனி புவா மீண்டும் போட்டியிடுகிறார். இவர் முன்பு பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

கணபதி ராவ்

மேலும் நடப்பு சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினரான கணபதி ராவ் மீண்டும்   சட்டமன்றத்திற்குப் போட்டியிடுகிறார் கடந்த பொதுத் தேர்தலில் கோத்தா கெமுனிங் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கணபதி ராவ் இந்த முறை தாமான் ஸ்ரீ மூடா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

கடந்த 2013 பொதுத் தேர்தலில் பெட்டாலிங் ஜெயா செலாத்தான்  தொகுதியின் கீழ் வரும் புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராஜிவ் ரிஷ்யாகரன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

மலாய் வேட்பாளர்கள்

சிலாங்கூரில் இரண்டு மலாய் வேட்பாளர்கள் சட்டமன்றங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். டுசுன் துவா சட்டமன்றத்தில் எட்ரி பைசால் யூசோப் என்பவர் ஜசெக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

பண்டார் உத்தாமா சட்டமன்றத் தொகுதியில் ஜமாலியா ஜமாலுடின் என்ற மலாய் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் 2008-2013 தவணைக் காலத்தில் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த ரோனி லியூ மீண்டும் சட்டமன்றத்திற்குத் திரும்புகிறார். 2013 பொதுத் தேர்தலில் இவருக்குப் போட்டியிட ஜசெக வாய்ப்பு வழங்கவில்லை. 2008 பொதுத் தேர்தலில் ரோனி லியூ பண்டமாரான் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

இந்த முறை ரோனி, சிப்பாங் நாடாளுமன்றத்தின் கீழ் வரும் சுங்கை பீலேக் சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவார்.

சிலாங்கூரின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் ஜசெக வேட்பாளர்களைக் களமிறக்குகிறது.