Home தேர்தல்-14 ஸ்ரீராம் வேட்புமனு விவகாரம்: போலீஸ் விசாரணைக்காக காத்திருக்கிறது தேர்தல் ஆணையம்!

ஸ்ரீராம் வேட்புமனு விவகாரம்: போலீஸ் விசாரணைக்காக காத்திருக்கிறது தேர்தல் ஆணையம்!

1041
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற, 14-வது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது, நெகிரி செம்பிலான் மாநிலம், ரெம்பாவ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் ரந்தாவ் சட்டமன்றத்தில் அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசானை எதிர்த்துப் போட்டியிட வந்த பிகேஆர் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராம் சின்னசாமியிடம் வேட்பாளருக்கான அட்டை இல்லாததால் அவருக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், முகமட் ஹசான் போட்டியின்றி வெற்றி பெறும் நிலையை அடைந்தார்.

இந்நிலையில், ஸ்ரீராம் சின்னசாமி தடுக்கப்பட்டது தொடர்பாக, பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பலர் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியதோடு, காவல்துறையிலும் புகார் அளித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அது குறித்து விளக்கமளித்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமது ஹாசிம் அப்துல்லா, “இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை அறிக்கைக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது. அதுவரை பொதுமக்கள் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.