Home தேர்தல்-14 டாயிம், ரபிடா, ராய்ஸ் அம்னோவிலிருந்து நீக்கம்!

டாயிம், ரபிடா, ராய்ஸ் அம்னோவிலிருந்து நீக்கம்!

1031
0
SHARE
Ad
டாயிம் சைனுடின் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – தொடர்ந்து அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மூன்று முக்கியத் தலைவர்களை அம்னோ கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும் அம்னோவின் முன்னாள் பொருளாளருமான துன் டாயிம் சைனுடின், அம்னோவின் முன்னாள் மகளிர் தலைவி டான்ஸ்ரீ ரபிடா அசிஸ், முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் ஆகிய மூவருமே அவர்களாவர்.

நேற்று வெள்ளிக்கிழமை (4 மே 2018) மலாக்காவில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பக்காத்தான் பேரணியில் டாயிம் சைனுடின், ரபிடா அசிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

ஆனால், ராய்ஸ் யாத்திம் ஊடகங்களின் வழி தனது எதிர்க் கருத்துகளை வெளியிட்டு வருகிறாரே தவிர, இதுவரையில் பகிரங்கமாக மேடையேறி தேசிய முன்னணிக்கு எதிராக உரையாற்றவில்லை.