Home தேர்தல்-14 சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக ஹிஷாமுடின் பிரச்சாரம்

சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக ஹிஷாமுடின் பிரச்சாரம்

1137
0
SHARE
Ad

சிகாமாட் – ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக பராமரிப்பு தேசிய முன்னணி அரசாங்கத்தின் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் இன்று சனிக்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஜோகூர் மாநிலத்திலுள்ள செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதியில் ஹிஷாமுடின் போட்டியிடுகிறார்.

தீவிரமான பொதுத் தேர்தல் போட்டிக்கிடையிலும் சிகாமாட் தொகுதிக்கு வருகை தந்து தனக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஹிஷாமுடினுக்கு டாக்டர் சுப்ரா தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice