Home தேர்தல்-14 8,253 வாக்களிப்பு மையங்கள் மாலை 5.00-க்கு மூடப்பட்டன

8,253 வாக்களிப்பு மையங்கள் மாலை 5.00-க்கு மூடப்பட்டன

775
0
SHARE
Ad

கோலாலம்பூர் – (மாலை 5.05 மணி நிலவரம்) மலேசியத் தொலைக்காட்சி ஆர்டிம் 1 அலைவரிசைக்கு பேட்டியளித்த மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் அப்துல்லா, நாடு முழுமையிலுமுள்ள 8,253 வாக்களிப்பு மையங்கள் மாலை 5.00 மணிக்கு மூடப்படும் என்றும் வாக்களிப்புக்கான நேரம் நீட்டிக்கப்படாது என்றும் அறிவித்தார்.

அரசாங்கப் பதிவேட்டில் தேர்தல் ஆணையம் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு என்று பதிவேற்றம் செய்திருப்பதால், தாங்கள் அந்த நேரத்தோடு வாக்களிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால், பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டால், தாங்கள் சட்டத்தை மீறி நடந்து கொண்டதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் நிலைமை ஏற்படலாம் என்றும் கூறினார்.

இதற்கிடையில் உட்புறங்களில் உள்ள சில வாக்களிப்பு மையங்கள் 5.00 முன்பாகவே மூடப்பட்டதாகவும், முகமட் ஹாஷிம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மாலை 5.00க்கு முன்பாகவே வாக்களிப்பு மையத்துக்கு வந்து வாக்களிக்க வரிசையில் நிற்பவர்களைத் தடை செய்யக் கூடாது என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.