Home தேர்தல்-14 ஜூன் 1 முதல் ஜிஎஸ்டி இல்லை

ஜூன் 1 முதல் ஜிஎஸ்டி இல்லை

1732
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தங்களின் பொதுத் தேர்தல் வாக்குறுதிப்படி எதிர்வரும் ஜூன் 1 முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படாது என பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு ‘0’ (சூழியம்) ஆக இருக்கும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் பதவியேற்ற 100 நாட்களுக்குள் ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒழிப்போம் என்ற வாக்குறுதிக்கு ஏற்ப துன் மகாதீர் பதவியேற்ற 5 நாட்களுக்குள்ளாகவே ஜிஎஸ்டி வரி விதிப்பை அகற்றி உள்ளார்.