Home தேர்தல்-14 வான் அசிசா மகளிர் நல அமைச்சர்

வான் அசிசா மகளிர் நல அமைச்சர்

1054
0
SHARE
Ad
வான் அசிசா

புத்ரா ஜெயா – துன் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கம் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. துன் மகாதீர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணைப் பிரதமரான வான் அசிசா மகளிர் சமூக நல அமைச்சராகச் செயல்படுவார்.

இன்று வியாழக்கிழமை காலையில் பெட்டாலிங் ஜெயாவில் பக்காத்தான் ஹரப்பான் தலைவர்களின் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய துன் மகாதீர் “எதிர்வரும் மே 21-ஆம் தேதி 13 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதற்கு மாமன்னரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.