Home தேர்தல்-14 மைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்

மைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்

1241
0
SHARE
Ad
மைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்த சந்திரகுமணன் – வரவேற்கும் கேவியஸ்

கோலாலம்பூர் – ஒரு காலத்தில் மைபிபிபி கட்சியில் தீவிரமாக இயங்கியதோடு, அந்தக் கட்சியின் கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர் டத்தோ சந்திரகுமணன்.

கட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, டான்ஸ்ரீ கேவியசால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சந்திரகுமணன், மற்ற எந்த அரசியல் கட்சியிலும் சேராமல், சமூக இயக்கங்களின் வழியான சேவைகளில் மட்டும் ஈடுபட்டு வந்தார்.

நேற்று சனிக்கிழமை (19 மே) கேவியஸ் நடத்திய  பத்திரிக்கையாளர் சந்திப்பில் எதிர்பாராத திருப்பமாக சந்திரகுமணன் மீண்டும் கேவிசுடன் கைகோர்த்து மைபிபிபியில் இணைந்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து மைபிபிபி கூட்டரசுப் பிரதேசத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் கெடா மாநில மைபிபிபி தலைவராக டத்தோ தாஸ் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்த கேவியஸ் தனக்கு எதிராகச் செயல்பட்ட அனைத்து முக்கியத் தலைவர்களையும் கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

நேற்று சனிக்கிழமை (மே 19) மைபிபிபி அலுவலகத்தில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேவியஸ் தேசிய முன்னணியில் இருந்து மைபிபிபி விலகும் முடிவையும் அறிவித்தார்.

மைபிபிபி கட்சியின் தலைவர் நான்தான் என உறுதிப்படுத்தும்  கடிதத்தை சங்கப் பதிவிலாகாவிடம் இருந்து தான் பெற்றுள்ளதாகவும் கேவியஸ் தெரிவித்தார்.