Home தேர்தல்-14 தே.முன்னணியிலிருந்து விலகும் முதல் தீபகற்பக் கட்சி மைபிபிபி

தே.முன்னணியிலிருந்து விலகும் முதல் தீபகற்பக் கட்சி மைபிபிபி

1447
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சபா மாநிலத்தில் சில கட்சிகள் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள வேளையில், மைபிபி கட்சியும் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாகவும், பக்காத்தான் ஹரப்பான் என்றழைக்கப்படும் நம்பிக்கைக் கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்கும் என்றும் அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் சமயத்தில் தனக்கு கேமரன் மலை நாடாளுமன்றம் ஒதுக்கப்படாததால் மைபிபிபி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த கேவியஸ் பின்னர் தனது பதவி விலகலை மீட்டுக் கொண்டதாகவும், தானே இனி மைபிபிபி கட்சியின் தலைவர் என்றும் அறிவித்தார்.

எனினும் கேவியஸ் மைபிபிபி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக, அந்தக் கட்சியின் மற்ற தலைவர்கள் அறிவித்தனர்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை (மே 19) மைபிபிபி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய கேவியஸ் தேசிய முன்னணியில் இருந்து மைபிபிபி விலகும் முடிவை அறிவித்தார்.

மைபிபிபி கட்சியின் தலைவர் நான்தான் என உறுதிப்படுத்தும்  கடிதத்தை சங்கப் பதிவிலாகாவிடம் இருந்து தான் பெற்றுள்ளதாகவும் கேவியஸ் தெரிவித்தார்.

இதன் மூலம், தீபகற்ப மலேசியாவில் இருந்து தேசிய முன்னணியின் தீவிர உறுப்பினராகச் செயல்பட்டு வந்த கட்சிகளில் அந்தக் கூட்டணியில் இருந்து விலகும் முதல் கட்சியாக மைபிபிபி திகழ்கிறது.

எனினும், கேவியசுக்குப் போட்டியாக மைபிபிபி கட்சியைக் கைப்பற்றியிருக்கும் மற்ற தலைவர்களின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.