Home நாடு சிங்கை பிரதமர் லீ சியன் லூங் – அன்வார் சந்திப்பு

சிங்கை பிரதமர் லீ சியன் லூங் – அன்வார் சந்திப்பு

899
0
SHARE
Ad
சனிக்கிழமை (19 மே) அன்வாருடன் சந்திப்பு நடத்திய லீ சியன் லூங் (படம்: நன்றி – லீ சியன் லூங் டுவிட்டர் பக்கம்)

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை (மே 19) ஒரு நாள் குறுகிய கால வருகை மேற்கொண்டு கோலாலம்பூர் வந்தடைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், புத்ரா ஜெயாவில் துன் மகாதீரைச் சந்தித்த பின்னர், தான் தங்கியிருந்த தங்கும் விடுதியில் துணைப் பிரதமர் வான் அசிசாவையும், அன்வார் இப்ராகிமையும் சந்தித்து அளவளாவினார்.

அன்வாருடனான தனது சந்திப்பு குறித்த புகைப்படத்தையும் லீ சியன் லூங் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார்.

லீயுடனான தனது சந்திப்பு குறித்து பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்த அன்வார் “நான் துணையமைச்சர், நிதியமைச்சர், துணைப்பிரதமராக இருந்த காலத்தில் இருந்து லீ சியன் லூங்கை நன்கு அறிவேன். தற்போது பழைய நண்பர்கள் என்ற முறையில் சந்தித்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.