Home தேர்தல்-14 13 பேர் கொண்ட மகாதீரின் புதிய அமைச்சரவை பதவியேற்றது

13 பேர் கொண்ட மகாதீரின் புதிய அமைச்சரவை பதவியேற்றது

1201
0
SHARE
Ad
துன் மகாதீர் – 10 மே 2018 -பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர்…

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை (21 மே) 13 பேர் கொண்ட அமைச்சரவை மாமன்னர் முன்னிலையில் பதவியேற்றனர்.

அவர்களில் நாட்டின் முதலாவது பெண் துணைப் பிரதமராக பதவியேற்கும் வான் அசிசா வான் இஸ்மாயிலும் ஒருவராவார். அவரது கணவர் அன்வார் இப்ராகிமும் இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

துன் மகாதீரின் புதிய அமைச்சரவையில் இரண்டு இந்திய அமைச்சர்கள் இடம் பெறுகின்றனர். மனித வள அமைச்சராக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ தொடர்பு பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.

இன்று பதவியேற்ற அமைச்சர்களின் பட்டியல் வருமாறு:

துணைப் பிரதமர் – டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் (பிகேஆர் – பண்டான்)

உள்துறை – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் (பெர்சாத்து – பாகோ)

கல்வி –  மஸ்லி மாலிக் (பெர்சாத்து- சிம்பாங் ரெங்கம்)

கிராமப்புற மேம்பாடு – ரீனா ஹருண் (பெர்சாத்து – தித்திவாங்சா)

மகளிர், குடும்ப நல மேம்பாடு – டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்

பொருளாதார விவகாரம் – முகமட் அஸ்மின் அலி (பிகேஆர் – கோம்பாக்)

வீடமைப்பு, ஊராட்சி மன்றங்கள் – சுரைடா கமாருடின் (பிகேஆர் – அம்பாங்)

நிதி அமைச்சு – லிம் குவான் எங் (ஜசெக – பாகான்)

போக்குவரத்து – அந்தோணி லோக் (ஜசெக – சிரம்பான்)

தொடர்பு மற்றும் பல்ஊடகம் – கோபிந்த் சிங் டியோ (ஜசெக – பூச்சோங்)

 
தற்காப்பு அமைச்சு – முகமட் சாபு (அமானா – கோத்தா ராஜா)
 
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் – சாலாஹூடின் அயூப் (அமானா – பூலாய்)
 
சுகாதார அமைச்சு – சுல்கிப்ளி அகமட் ( அமானா – கோலசிலாங்கூர்)