Home தேர்தல்-14 அமைச்சரவை 2018: 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம்

அமைச்சரவை 2018: 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம்

901
0
SHARE
Ad
தலைப்பாகை அணிந்து பதவியேற்கும் கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை பதவியேற்ற புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 2 இந்திய அமைச்சர்களுமே தலைப்பாகை அணிந்து பதவியேற்ற அதிசயம் நிகழ்ந்தது.

வழக்கமாக மஇகாவைச் சேர்ந்த இந்திய அமைச்சர்கள் மாமன்னர் முன்னால் பதவியேற்கும்போது மரியாதைக்காக சொங்கோக் எனப்படும் மலாய் பாரம்பரிய குல்லாய் அணிந்து பதவியேற்பர்.

ஆனால், இன்று அமைச்சராகப் பதவியேற்ற கோபிந்த் சிங் டியோ, சீக்கியர்கள் வழக்கமாக அணியும் சீக்கிய தலைப்பாகையுடன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

#TamilSchoolmychoice

கோபிந்த் சிங்கின் தந்தை கர்ப்பாலும் சீக்கிய வம்சாவளியினர் ஆனாலும் எப்போதும் சீக்கிய முறைப்படியிலான தலைப்பாகையை அணிந்ததில்லை. அதே வேளையில் அவருக்கு மாமன்னரின் முன்னால் விருதுக்காகவோ, அல்லது அமைச்சுப் பதவிக்காகவோ நிற்கும் நிலைமையும் அவரது வாழ்நாளில் ஏற்பட்டதில்லை.

ஆனால், தந்தையின் அடிச்சுவட்டில் அரசியலில் காலடி எடுத்து வைத்த கோபிந்த் சிங் டியோ இன்று பக்காத்தான் கூட்டணி சார்பில் தொடர்பு மற்றும் பல்ஊடக அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது இன்று கோபிந்த் சிங் சீக்கிய முறைப்படியிலான தலைப்பாகை அணிந்து கொண்டு பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அவரைப் போன்றே மனித வள அமைச்சராகப் பொறுப்பேற்ற எம்.குலசேகரனும் தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.