Home தேர்தல்-14 நெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும்...

நெகிரி மாநிலம் சாதனை : 2 இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர்கள் – துணை சபாநாயகரும் இந்தியர்!

1595
0
SHARE
Ad

சிரம்பான் – நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் சார்பில் அம்மாநில மந்திரி பெசாராக அமினுடின் ஹருண் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

அதைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை (23 மே) நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஆட்சிக் குழு பதவியேற்கிறது. புதிய மாநில அரசாங்கத்தில் இந்தியர்களின் பங்கேற்பு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஓர் இந்தியர் மட்டுமே ஆட்சிக் குழுவில் பதவி வகித்த நிலைமை மாறி நாளை பதவியேற்கவிருக்கும் ஆட்சிக் குழுவில் இருவர் இடம் பெறவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் மற்றும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் ஆகிய இருவரும் நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களாகப் பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தை அடுத்து 2 ஆட்சிக் குழு உறுப்பினர்களைக் கொண்டுள்ள மாநிலமாக நெகிரி செம்பிலான் திகழ்கிறது.

ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினரான பிகேஆரைச் சேர்ந்த ரவி முனுசாமி நெகிரி மாநில சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நெகிரி செம்பிலானில் மொத்தம் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளை பிகேஆர் கட்சியும் எஞ்சிய 16 தொகுதிகளை தேசிய முன்னணியும் கைப்பற்றியுள்ளன. பாஸ் எந்த ஒரு தொகுதியையும் வெல்ல முடியவில்லை.