Home நாடு “ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்

“ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்

1801
0
SHARE
Ad

காப்பார் – கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர் போட்டி, 26 மே 2018ஆம் நாள் (சனிக்கிழமை) தேசிய வகை மெதடிஸ்ட் காப்பார் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அவர்கள் சிறப்பு பிரமுகராகக் கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

#TamilSchoolmychoice

அவர் தம் உரையில் ஆசிரியர்கள், மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும் என்றும், அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் பங்கெடுத்து அவர்களின் திறனை வளர்த்துக் கொண்டு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களை தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்க இவ்வாறான திட்டங்கள் மென்மேலும் வளர பெற்றோரின் பங்கும் மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாண்டு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து சுமார் 150 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இவ்வாறான போட்டிகள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையே நல்லதொரு தளமாக அமையும் பொருட்டு நாடு முழுவதும் தித்தியான் டிஜிட்டல் எனும் திட்டத்தின் கீழ், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் தாம் பெரும் மகிழ்ச்சி கொண்டதோடு மட்டுமின்றி ஏற்பாட்டாளர்களுக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் குணராஜ் தெரிவித்துக் கொண்டார்.

மாணவனுடன் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்

மாநில நிலையில் வெற்றி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து தேசிய நிலையில் நடைபெறும் போட்டியில் பங்குபெறுவர்.

கோலாலம்பூர் & சிலாங்கூர் மாநில நிலையிலான தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர் போட்டியில் வெற்றிப் பெற்ற பள்ளிகள்:

எண் மாணவர் பெயர் பள்ளியின் பெயர்
1 B. THEIVIHAN SJKT METHODIST KAPAR
2 B. YUKENDRAN SJKT SIMPANG LIMA, KLANG
3 M. SRI THARINI SJKT TELUK PANGLIMA GARANG
4 P. LALITHA SJKT BATU AMPAT, KLANG
5 N. THANUSHRI SJKT SIMPANG LIMA, KLANG
6 C. KRIIHIGAN SJKT SIMPANG LIMA, KLANG
7 K. SHARVIN SJKT SIMPANG LIMA, KLANG
8 P. NIVEYTHAA SJKT SEGAMBUT, KL
9 P. RAGUNATHAN SJKT SIMPANG LIMA, KLANG
10 B. KUGENESH SJKT SIMPANG LIMA, KLANG
11 G. KIERTHAANAH SJKT SG MANGGIS, BANTING
12 V. REVAATHI SJKT SG RENGGAM, SHAH ALAM
13 S. THEVI SJKT SARASWATHY SG BULOH
14 M. GANAGESS SJKT KAJANG , SELANGOR
15 NUR PARVEENA YUSOF SJKT KAJANG, SELANGOR
16 V. UDDESSHAN SJKT KAJANG, SELANGOR
17 M. GEETHANA SJKT SG TERAP, K.SELANGOR
18 D. THANESH SJKT TAMAN MELAWATHI, SELANGOR
19 V. VARNHIKAA SJKT SIMPANG LIMA, KLANG
20 G. GANGA SRI SJKT SG CHOH, SELANGOR

 

மேற்காணும் பட்டியல்படி மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற முதல் 20 நிலை வெற்றியாளர்களான இம்மாணவர்கள் தேசிய நிலை போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.