Home நாடு நஜிப்பிடம் 2 மணி நேர விசாரணை

நஜிப்பிடம் 2 மணி நேர விசாரணை

875
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த மே 18-ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களிலும், இடங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தி ரொக்கப் பணத்தையும் விலையுயர்ந்த ஆபரணங்களையும் கைப்பற்றியது தொடர்பில் காவல் துறையினர் இன்று புதன்கிழமை இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தி நஜிப்பிடம் வாக்குமூலம் பெற்றனர்.

இன்று காலை தாமான் டூத்தாவில் உள்ள நஜிப்பின் இல்லத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் அங்கு சுமார் இரண்டு மணி நேரம் தங்கியிருந்து நஜிப்பிடமிருந்து வாக்குமூலம் பெற்ற பின்னர் பிற்பகல் 1.40 மணியளவில் வெளியேறினர் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டாங் வாங்கி காவல் நிலையத்திலிருந்து அந்தக் காவல் துறை அதிகாரிகள் வருகை தந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் நஜிப் பெக்கானில் காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்திருப்பதோடு, அவரது மகள் நூர்யானா நஜ்வாவும் காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்திருக்கிறார். அவரிடமும் காவல் துறை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருக்கிறது.