Home வணிகம்/தொழில் நுட்பம் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது

ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாடு தொடங்குகிறது

1016
0
SHARE
Ad

சான் ஓசே – உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்கள் குவியும் மாநாடாகவும், அனைத்துல தொழில் நுட்ப ஆர்வலர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் முக்கியக் களமாகவும் திகழும் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த ஆண்டும் வழக்கம்போல ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகும் புதிய தொழில் நுட்ப அம்சங்கள், செல்பேசி மற்றும் கணினி உலகில் கொண்டுவரப்படவிருக்கும் அதிரடி மாற்றங்கள் ஆகியவை அரங்கேறப் போகும் அரங்கமாக இந்த மாநாடு திகழும்.

ஆப்பிள் மாநாட்டுக்காகத் தயாராகும் அரங்கம் – படம் நன்றி: ஆப்பிள் இன்சைடர்

தற்போது ஐஓஎஸ் 11 என்ற இயங்குதளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஐபோன் திறன்பேசிகள் அடுத்த கட்டமாக ஐஓஎஸ் 12 என்ற இயங்குதளத்தில் இயங்கும். இந்த ஐஓஎஸ் 12 இயங்குதளத்தின் சிறப்பு அம்சங்கள் இந்த மாநாட்டில் விளக்கப்படும்.

#TamilSchoolmychoice

பொதுவாக ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய கருவிகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் காணும். அதற்கு முன்பாக ஜூன் மாதத்தில் நடைபெறும் ஆப்பிள் மேம்பாட்டாளர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தொழில் நுட்ப அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த முறை ஆப்பிள் மாநாடு கடந்த ஆண்டைப் போலவே கலிபோர்னியாவில் உள்ள சான் ஓசே (San Jose) நகரில் நடைபெறுகிறது.