சான் ஓசே (அமெரிக்கா) – இங்கு ஜூன் 4 தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்பிள் தொழில் நுட்ப மேம்பாட்டாளர்களின் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஐஓஎஸ் 12 என்ற புதிய இயங்கு தளத்தில் (ஓபரேட்டிங் சிஸ்டம்) பல்வேறு புதிய- புதுமையான- நவீனமான அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
ஆப்பிள் ஐபோன்கள், ஐபேட் எனப்படும் கையடக்கக் கருவிகள் ஆகியவற்றில் இந்தப் புதிய ஐஓஎஸ் 12 தொழில் நுட்ப இயங்கு தளம் இனி கட்டம் கட்டமாக புகுத்தப்படும்.
ஆப்பிள் கருவிகளின் வழி பேஸ் டைம் (Face Time) என்ற குறுஞ்செயலித் தளத்தின் மூலம் பயனர்கள் காணொளி (வீடியோ) மூலம் நேரடியாக உரையாடலாம் என்பது ஏற்கனவே இருக்கும் அம்சமாகும்.
தற்போது இந்த அம்சம் விரிவு படுத்தப்பட்டு, ஒரே நேரத்தில் 32 பேர்களுடன் பேஸ் டைம் மூலம் ஒளி, ஒலி வழி உரையாடக் கூடிய புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.