Home உலகம் 1எம்டிபி: இலண்டன் காவல் துறையில் சேவியர் ஜஸ்டோ புகார்!

1எம்டிபி: இலண்டன் காவல் துறையில் சேவியர் ஜஸ்டோ புகார்!

1294
0
SHARE
Ad
இலண்டன் ஸ்காட்லாந்து யார்ட் முன்பாக ஜஸ்டோ தம்பதியர்

இலண்டன் – சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் பெட்ரோ சவுதி அனைத்துலக அதிகாரி சேவியர் ஜஸ்டோ 1எம்டிபி விவகாரம் தொடர்பாகவும், தனக்கு எதிராகப் புனையப்பட்ட சதிவலை குறித்தும் இலண்டனில் உள்ள ஸ்காட்லாந்து யார்ட் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

விஸ்வரூபம் எடுத்து தொடர்ந்து கொண்டிருக்கும் 1எம்டிபியின் விவகாரத்தில் இது மற்றொரு திருப்பமாகக் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரிட்டனும் 1எம்டிபி விசாரணையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜஸ்டோ தான் புகார் செய்திருக்கும் நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். அதன்படி பெட்ரோ சவுதி நிறுவனம், அதன் உரிமையாளர் தாரெக் ஒபாய்ட், தலைமை நிதி அதிகாரி பெட்ரிக் மஹோனி ஆகியோர் மீதும், புரொடெக்‌ஷன் குரூப் இண்டர்நேஷனல் (Protection Group International) என்ற நிறுவனம் மீதும் அவர் புகார் செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

ஸ்காட்லாந்து காவல்துறை அதிகாரியாக தன்னைக் காட்டிக் கொண்டு ஜஸ்டோவிடம் இருந்து தான் தாய்லாந்தில் இருந்த போது, பொய்யான வாக்குமூலத்தைப் பெற நெருக்கடி தந்த பால் பின்னிகன் என்பவர் குறித்தும் ஜஸ்டோ புகார் செய்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர் இந்தப் புகார்களைச் செய்துவிட்டு தற்போது பிரிட்டனிலிருந்து ஜஸ்டோ வெளியேறிவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஏற்கனவே சுவிட்சர்லாந்து நாட்டிலும் இதே போன்ற காவல் துறைப் புகார்களை ஜஸ்டோ செய்திருக்கின்றார்.

இந்த முறை 1எம்டிபி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு எதிராக ஜஸ்டோ இந்தப் புகார்களைச் செய்திருக்கிறார்.