Home இந்தியா கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பகுதி அடுத்த மாதம் துவங்கும்- மன்மோகன் சிங் அறிவிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பகுதி அடுத்த மாதம் துவங்கும்- மன்மோகன் சிங் அறிவிப்பு

608
0
SHARE
Ad

Manmohan-Sliderடர்பன், மார்ச் 28 – மாறுபட்ட விவாதங்களும், கருத்து வேற்றுமைகளும் சூழ்ந்துள்ள திட்டமான கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது பகுதி தமிழ்நாட்டில் அடுத்த மாதம் செயல்படத்துவங்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்கா, டர்பனில் கடந்த செவ்வாயன்று நடந்த ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் ரஷ்ய அதிபர் விலாடிமார் புடினை சந்தித்தபோது மன்மோகன் சிங் இந்த உறுதிமொழியை அளித்தார்.

மேலும் பிரதமர், இந்த முதல் பிரிவு அடுத்தமாதம் செயல்படத்துவங்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கும் அதே வேளையில் பிரிவு 3 மற்றும் 4க்கான உள்நாட்டு அனுமதி மற்றும் மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளோடு விரைவில் இயக்கப்போவதாக ரஷ்ய அதிபரிடம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த கூடங்குளம் அணுமின் நிலையம் ஆரம்பித்தது முதல் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினரின் போராட்டத்தாலும்,  திருநெல்வேலி மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமத்தினர் தங்கள் பாதுகாப்புக்காக இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்து நீண்ட காலமாக போராடி வருவதாலும், இந்த நிலைய செயல்பாடுகள்  ஸ்தம்பித்துப்போய்,  மிகவும் தாமதப்படுத்தப்பட்டே இப்போது செயல்படப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜப்பான், புக்குஷிமாவில் நிகழ்ந்தபேரழிவுக்குப் பின் அணுசக்திக்கெதிரான எதிர்ப்புகள் தீவிரமடைந்துள்ளன.

1988 நவம்பர் 20ஆம் தேதி அரசுகளுக்கிடையேயான  கூடங்குளம் அணுமின் ஒப்பந்தம் அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், முன்னாள் சோவியத் குடியரசுத்தலைவர் மிக்கேல் கொர்பாசேவ்வுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.