Home நாடு ஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்!

ஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அதீத அன்பைப் பொழிந்த நடிகை வருத்தம்!

1211
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ரமலான் பண்டிகையின் இரண்டாவது நாள் தனது கணவர் குடும்பத்தோடு பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்கச் சென்ற மலேசிய நடிகை இசாரா ஆயிஷா, ஆர்வ மிகுதியில் மகாதீரிடம் அளவுக்கு அதிகமான அன்பைப் பொழிந்தபடி புகைப்படம் எடுத்துவிட்டார்.

இப்புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி பலரிடமிருந்து கடும் விமர்சனங்கள் வரத் தொடங்கியதையடுத்து, இசாரா தனது செயலுக்கு மகாதீர் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

“எல்லோரையும் போல, நானும் எப்போது துன்னை சந்தித்தாலும் மிகுந்த ஆர்வமாகிவிடுகிறேன். இணையத்தில் அப்புகைப்படத்திற்கு எழுந்திருக்கும் எதிர்மறைக் கருத்துகளால் வருத்தமடைகின்றேன்.

#TamilSchoolmychoice

“எனது செயலுக்காக துன் குடும்பத்தாரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என இசாரா குறிப்பிட்டிருக்கிறார்.