Home உலகம் நெல்சன் மன்டேலாவுக்காக பிரார்த்திக்க தென் ஆப்பிரிக்க அதிபர் வேண்டுகோள்!

நெல்சன் மன்டேலாவுக்காக பிரார்த்திக்க தென் ஆப்பிரிக்க அதிபர் வேண்டுகோள்!

694
0
SHARE
Ad

nelson-mandelaஜோகன்ஸ்பர்க், மார்ச் 29- உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நெல்சன் மண்டேலா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் சுமா வேண்டுகோள் வைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் அந்நாட்டின் தலைசிறந்த தலைவருமான  நெல்சன் மண்டேலா (94) நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு டாக்டர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மண்டேலா விரைந்து குணமடைய வேண்டும் என்றும் இதற்காக தென் ஆப்பிரிக்க மக்களும் உலகத்திலுள்ள மக்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அதிபர் சுமா கூறியுள்ளார்.