Home நாடு சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவர்

சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவர்

888
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்னும் ஒரு வாரத்தில் வரலாற்றுபூர்வ புதிய நாடாளுமன்றம் கூடும்போது, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு புதிய பொறுப்பை – நாட்டின் எதிர்க்கட்சி என்ற பொறுப்பை – தேசிய முன்னணி ஏற்கவிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி (படம்) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.

18 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாஸ் கட்சியும் சாஹிட் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

14-வது பொதுத் தேர்தல் முடிவுகளின்படி பாஸ் 18 தொகுதிகளையும் தேசிய முன்னணி 79 தொகுதிகளையும் வென்றது.

எனினும் மே 9 தேர்தலுக்குப் பின்னர் அடுத்தடுத்து பல கட்சிகள் தேசிய முன்னணியில் இருந்து விலகின. இதனைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் பலம் அம்னோ 54, மஇகா 2, மசீச 1 – எனக் குறைந்தது.

அம்னோவிலிருந்தும் இதுவரை 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து 54 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் தனிப் பெரும் கட்சியாக தேசிய முன்னணி திகழ்வதால் அதன் தலைவர் என்ற முறையில் சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.