Home நாடு சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் ஆகஸ்ட் 4 நடைபெறும்

சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் ஆகஸ்ட் 4 நடைபெறும்

823
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் மலேசியத் தேர்தல் ஆணையம் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதிகளை அறிவித்தது.

அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை, ஜூலை 21-ஆம் தேதி சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.

போட்டியிருப்பின், எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறும்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினரான பிகேஆர் கட்சியின் மாட் சுகைமி ஷாபி (வயது 50) கடந்த ஜூலை 2-ஆம் தேதி காலமானார்.