Home நாடு நஜிப் நீதிமன்றத்தில் உத்தரவாதத் தொகை செலுத்தினார்

நஜிப் நீதிமன்றத்தில் உத்தரவாதத் தொகை செலுத்தினார்

1176
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் நஜிப் துன் ரசாக் தனக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவாதத் தொகையான (ஜாமீன்) 1 மில்லியன் ரிங்கிட்டில் எஞ்சிய தொகையான 5 இலட்சம் ரிங்கிட்டை அவரது புதல்வர் மற்றும் புதல்வி மூலமாக இன்று திங்கட்கிழமை பிற்பகலில் செலுத்தியுள்ளார்.

நஜிப்புக்கான உத்தரவாதத்தை அவரது புதல்வரும் புதல்வியும் வழங்கியிருந்தனர்.

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நஜிப் துன் ரசாக் மீதான வழக்கு நிதிக்கு அம்னோவினர் தொடர்ந்து கடந்த சில நாட்களாக நிதி திரட்டி வந்தனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து தனது வழக்குக்கான உத்தரவாதம் மீதிலான நடைமுறைகளை நஜிப் பூர்த்தி செய்திருக்கிறார்.

இன்று திங்கட்கிழமை ஜூலை 9-ஆம் தேதிக்குள்ளாக நஜிப் துன் ரசாக் தனது வழக்குக்கான உத்தரவாதத் தொகையான 1 மில்லியன் ரிங்கிட்டில் எஞ்சிய 5 இலட்சம் ரிங்கிட்டைச் செலுத்தியாக வேண்டும் என நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அன்று நஜிப் சார்பில் அவரது புதல்வரும், புதல்வியும் 5 இலட்சம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையைச் செலுத்தினர்.

தனது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் உத்தரவாதத் தொகைக்கு பதிலாக தனது இல்லங்கள் மீதான நிலப்பட்டாக்களை அடமானம் வைக்கத் தயாராக இருப்பதாக நஜிப் கூறியிருந்தார்.