Home நாடு மலாய் மொழியில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்த டோமி தோமஸ்

மலாய் மொழியில் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்த டோமி தோமஸ்

1204
0
SHARE
Ad
டோமி தோமஸ் – கோப்புப் படம்

புத்ரா ஜெயா – அண்மைய நாட்களில் பெரும் சர்ச்சையாகி இருந்த மற்றொரு விவகாரம் டோமி தோமசின் மலாய் மொழி தேர்ச்சி. அரசாங்கத் தலைமை வழக்கறிஞராகத் தேர்வு பெற்றவுடன் அவர் வழங்கிய முதல் நேர்காணல்களில் நான் எனது மலாய் மொழி புலமையை கூர்மைப்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் கூறியிருந்தார் அவர்.

அதைத் தொடர்ந்து நஜிப் ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அந்த வழக்கை ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் டோமி தோமஸ். அன்றைய தினமே நீதிமன்றத்தில் கூடிய அம்னோவினர் டோமிக்கு எதிராகக் கூச்சலிட்டு அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பையே பாதியில் கலைத்தனர்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு முனைகளில் டோமி தோமசின் மலாய் மொழி மீதான புலமை சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில்தான் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 12) புத்ரா ஜெயாவில் நடைபெற்ற நீதித் துறை ஊழியர்களுக்கான ஹரி ராயா விருந்துபசரிப்பில் உரையாற்றிய டோமி தோமஸ் முழுக்க முழுக்க மலாய் மொழியில் உரையாற்றி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியதோடு, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் கைத்தட்டலையும் பெற்றார்.