Home நாடு வேதமூர்த்தி செனட்டராகிறார்! பெர்னாமா உறுதிப்படுத்தியது!

வேதமூர்த்தி செனட்டராகிறார்! பெர்னாமா உறுதிப்படுத்தியது!

1193
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி நாளை செவ்வாய்க்கிழமை செனட்டராகப் பதவி ஏற்பார் என்ற தகவலை பெர்னாமா செய்தி நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் 8 செனட்டர்களில் வேதமூர்த்தியும் ஒருவர் என பெர்னாமா தெரிவித்துள்ளது.

ஜசெக ஜோகூர் தலைவர் லியூ சின் தோங், திரெங்கானு அமானா நெகாரா கட்சியின் தலைவர் டத்தோ ராஜா கமாருல் பஹ்ரின் ஷா, பினாங்கு மாநில பெர்சாத்து கட்சித் தலைவர் மர்சுக்கி யாஹ்யா, நிதித் துறை நிபுணர் டாக்டர் முகமட் ரட்சி முகமட் ஜிடின், டத்தோ இஸ்மாயில் இப்ராகிம், ஆகியோரும் வேதமூர்த்தியுடன் செனட்டர்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர்.

#TamilSchoolmychoice

இந்த அறுவரும் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்றனர். திரெங்கானு மாநில சட்டமன்றத்தின் மூலம் மாநிலத்தைப் பிரதிநிதிக்கும் செனட்டராக, டத்தோ ஹூசேன் அவாங் நியமிக்கப்படுகிறார். கிளந்தான் மாநில சட்டமன்றத்தின் சார்பில் மாநிலப் பிரதிநிதியாக அஸ்மாக் ஹூசேன் நியமனம் பெறுகிறார்.

இவர்களின் பதவியேற்பு சடங்கு பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணிக்கு மாமன்னர் அரண்மனையான இஸ்தானா நெகாராவில் அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களுக்கான பதவியேற்பு சடங்குகள் நடைபெறும்.

மூன்று பேர் அமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்றும் சிலர் துணையமைச்சர்களாக நியமிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.