Home நாடு ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டாரா?

ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டாரா?

1239
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய மனிதராகத் திகழும் ஜோ தெக் லோ என்ற ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இந்தச் செய்தியை இதுவரை யாரும் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ளவில்லை. பிரதமர் துன் மகாதீர் நானும் ஊடகங்கள் மூலமாகத்தான் கேள்விப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருண், காவல் துறையினரால் இந்தத் தகவலை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.