Home நாடு பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்

பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்

1608
0
SHARE
Ad
விபத்தில் மரணமடைந்த இங் தியன் சீ

கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் இங் தியன் சீ எதிர்பாராதவிதமாக சாலை விபத்தொன்றில் காலமானார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிராண்ட் சாகா நெடுஞ்சாலையின் 11.7 கிலோ மீட்டரில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் 40 வயதான இங் தியன் சீ தலையில் பலமாக அடிபட்ட காரணத்தால் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

கோலாலம்பூரில் இருந்து காஜாங் செல்லும் வழியில் இந்த விபத்து நடந்ததாக காஜாங் காவல் துறைத் தலைவர் ஏசிபி அகமட் டிசாபிர் உறுதிப்படுத்தினார். இங் சென்ற வாகனம் ஒரு நீண்ட பாரம் தூக்கி லாரியின் பின்னால் மோதியதைத் தொடர்ந்து நிகழ்ந்த விபத்தில் இங் உயிரிழந்தார்.

பலாக்கோங் சட்டமன்றம் – 14-வது பொதுத் தேர்தல் முடிவுகள்

மே 9 பொதுத் தேர்தலில் ஜசெகவைச் சேர்ந்த இங் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டு தேசிய முன்னணி வேட்பாளரான லிம் சின் வா என்பவரை 35,538 வாக்குகளில் தோற்கடித்தார். 2013 பொதுத் தேர்தலிலும் இங் இதே பலாக்கோங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

இங் மறைவைத் தொடர்ந்து, சிலாங்கூரில் இரண்டாவது சட்டமன்ற இடைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுகைமி ஷாபி கடந்த ஜூலை 2-ஆம் தேதி அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.