Home கலை உலகம் “அச்சம் தவிர் – மிகவும் ரசித்தேன்” – காஷிகா செல்வம் கருத்து!

“அச்சம் தவிர் – மிகவும் ரசித்தேன்” – காஷிகா செல்வம் கருத்து!

1696
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பாடல், நடிப்பு என இளம் வயதிலேயே மலேசியர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் காஷிகா செல்வம்.

தனது இனிமையான குரலாலும், துடிப்பான பேச்சாற்றலாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக மலேசியாவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்டிருக்கும் காஷிகா, அண்மையில், பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவையும், அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவையும் துணிச்சலாகவும், கொஞ்சமும் தடுமாற்றம், தயக்கம் இன்றி பேட்டி எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கலகலப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்த அவரது பேட்டி மலேசியர்கள் பலராலும் பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. காஷிகாவிற்கு ஏற்றது போல், பிரதமரும், அவரது துணைவியாரும் குழந்தைகளாய் மாறிப் போனார்கள். அந்த அளவிற்கு அப்பேட்டி இனிமையாக இருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், காஷிகா செல்வம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அச்சம் தவிர்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்து, அது குறித்த தனது கருத்தை தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் காணொளி வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதில் காஷிகா கூறியிருப்பதாவது:

“அச்சம் தவிர் திரைப்படத்தைப் பார்த்தேன். என்னை மிகவும் கவர்ந்தது. படம் மிகவும் காமெடியாக வாய்விட்டு சிரித்து ரசிக்கும் படியாக இருந்தது. எனது அம்மா கண்களில் நீர் வழியும் அளவிற்கு சிரித்து ரசித்தார். இவ்வளவு அற்புதமான திரைப்படத்தை இப்போதே திரையரங்கு சென்று பாருங்கள்” என்று காஷிகா செல்வம் கூறியிருக்கிறார்.

எஸ்.எஸ்.விக்னேஸ்வரன், கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், டிஎச்ஆர் வானொலியைச் சேர்ந்த உதயா, ஆனந்தா, கீதா, ரேவதி ஆகியோரோடு, நடிகர் கானா, விகடகவி மகேன், பாடகர் ரேபிட் மேக், ஆல்வின் மார்டின், குபேன் மகாதேவன், ஜெய், ஷாலு, அகிலா, ஷீஜே, சிகே, டேடி ஷேக் என ஒரு பெரிய உள்நாட்டு நட்சத்திரப் பட்டாளமே முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘அச்சம் தவிர்’ திரைப்படம், கடந்த ஜூலை 5-ம் தேதி முதல், நாடெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையீடு கண்டு மக்களின் வரவேற்பினைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

‘அச்சம் தவிர்’ திரைவிமர்சனத்தை கீழ்க் காணும் இணைப்பின் வழியாகப் படிக்கலாம்.

“அச்சம் தவிர்” – இந்தியப் படங்களுக்கு இணையான தொழில் நுட்பம்

“அச்சம் தவிர்” திரைப்படம் தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

  1.  ‘அச்சம் தவிர்’ போஸ்டரில் இந்தக் குறிப்புகளையெல்லாம் கவனித்தீர்களா?

2.  வயிறு குலுங்கும் நகைச்சுவை-உறைய வைக்கும் திகில் – “அச்சம் தவிர்” திரையீடு!

3. அச்சம் தவிர்” – முன்னோட்டம்