ஷா ஆலாம் – சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஷாஹாருடின் படாருடின் இன்று வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 55.
உடல் நலம் குன்றியிருந்த ஷாஹாருடின் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது மறைவைத் தொடர்ந்து 3-வது சட்டமன்ற இடைத் தேர்தலை சிலாங்கூர் மாநிலம் எதிர்நோக்குகிறது.
மே 9 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மறைந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களுமே சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் சார்பாகப் போட்டியிட்டு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாஹாருடின் சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக இஸ்லாமிய விவகாரங்கள், கல்வி, மனித வள மேம்பாடு ஆகிய துறைகளுக்கான தலைவராக இருந்தார்.
இன்று மாலை 6.28 மணியளவில் புத்ரா ஜெயா மருத்துவமனையில் அவர் காலமானார். குடல் புற்றுநோயினால் அவர் காலமானார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.