Home நாடு மாயமான 19 பில்லியன் : குவான் எங் காவல் துறையில் வாக்குமூலம்!

மாயமான 19 பில்லியன் : குவான் எங் காவல் துறையில் வாக்குமூலம்!

831
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வரி வசூல் 19.25 பில்லியன் மாயமாகிப் போனதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிடம், “அப்படியென்றால் காவல் துறையில் புகார் செய்யுங்கள்” என சவால் விடுத்தார் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் .

அதைத் தொடர்ந்து லிம் குவான் எங் காவல் துறையில் இது குறித்துப் புகார் செய்தார். தனது புகார் தொடர்பில் காவல் துறையினர் இன்று தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக லிம் குவாங் எங் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

குற்றவியல் பிரிவு 409-இன் கீழ் தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குவான் எங் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

குற்றவியல் பிரிவு 409-இன்படி தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிதி அல்லது சொத்துக்களை பொதுச் சேவை ஊழியர் ஒருவர் நம்பிக்கை மோசடி செய்தால் அவர் மீது குற்றம் சாட்டப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பிரம்படியும் தண்டனையாக வழங்கப்படும். அபராதமும் விதிக்கப்படலாம்.