இதனைத் தொடர்ந்து அம்னோ போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
அதே வேளையில் தற்போது தங்களுக்கிடையில் முகிழ்த்துள்ள அரசியல் நல்லிணக்கத்திற்கு ஏற்ப, அம்னோ போர்ட்டிக்சனில் போட்டியிட வழிவிட்டு பாஸ் கட்சி ஒதுங்கிக் கொள்ளும் என அந்தக் கட்சியும் அறிவித்து விட்டது.
சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் அன்வார் இப்ராகிமுக்கும், அம்னோ வேட்பாளருக்கும் இடையிலான போட்டியாகத் திகழும்.
Comments