Home கலை உலகம் பிக்பாஸ் 2 : மும்தாஜ் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 2 : மும்தாஜ் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்

1362
0
SHARE
Ad

சென்னை – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமையன்று (16 செப்டம்பர்) ஒளியேறிய பகுதியில் இந்த வாரம் நடிகை மும்தாஜ் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட நான்கு பேர் இந்த வாரம் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

ரித்விகா, மும்தாஸ், ஐஸ்வர்யா, விஜயலெட்சுமி ஆகிய நால்வரும் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில் ரித்விகா இரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

90 நாட்களைக் கடந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கமல்ஹாசன் அறிவித்தார்.