Home நாடு சாகிர் நாயக்: முஜாஹிட் அறிக்கைக்கு இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு

சாகிர் நாயக்: முஜாஹிட் அறிக்கைக்கு இந்து தர்ம மாமன்றம் வரவேற்பு

1582
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மதபரப்புரையாளர் சாகிர் நாயக் பிற சமயத்தை கேலி செய்து இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்வதை, இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹிட் யூசுப் ரவா சாடியுள்ளதை மலேசிய இந்து தர்ம மாமன்றம் வரவேற்றுள்ளது.

இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சர் முஜாஹிட் அண்மையில் விடுத்த பத்திரிக்கை செய்தியில் இந்திய முஸ்லிம் இஸ்லாமிய மதப் பரப்புரையாளர் சாகிர் நாயக்கை சாடியுள்ளார். இந்நாட்டிலுள்ள பிற சமயங்களைப் வம்புக்கு இழுக்கும் தோரணையிலும் பரிகசிக்கும் வகையிலும் இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்வதை சாடியுள்ளதை,
நம் நாட்டு பல்லின மக்களின் நல்லிணக்கம் கருதி மாமன்றம் வரவேற்கிறது என மாமன்றத்தில் தேசியத் தலைவர் இராதாகிருஷ்ணன் அழகுமலை (படம்) அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மற்ற மதத்தினரைக் கேலி செய்யும் விவாதத்தை நாங்கள் விரும்பவில்லை. மற்ற மதங்களை எள்ளி நகையாடி இஸ்லாமிய பிரச்சார செய்வதை நாம் கண்டிக்க வேண்டும்,” என்று முஜாஹிட் கூறியுள்ளார்.

இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியத்தின் தலைவர் சாகிர் நாயக் கடந்த 11 ஆம் திகதி ஏப்ரல் 2016 இல் மலேசிய திரெங்கானு பல்கலைக்கழகத்திலும் ( UMT ) 17 ஆம் திகதி ஏப்ரல் 2016 இல் மலாக்கா மலேசிய தொழில்நுட்ப  பல்கலைக்கழகத்திலும் ( UTeM ) இஸ்லாமிய சமய பிரச்சாரம் நடத்தினார். இது போன்றே கடந்த 29 செப்டம்பர் 2012 ஆம் திகதி ஷா ஆலாமில் இருக்கும் யூஐடிஎம் பல்கலைக்கழகத்தில் ( UITM ) நிகழ்த்திய தமது சொற்பொழிவில் இந்து மற்றும் கிறிஸ்துவ சமயத்தை வெளிப்படையாக அவமதித்து மனம் நோகும் வகையில் பேசி உள்ளார். முஸ்லீம் மாணவர்களுக்கு மத வெறியை தூண்டும் நோக்கத்துடன் இஸ்லாமியத்துடன் ஒப்பிட்டு இந்து, கிறிஸ்துவத்தின் எதிர்மறையான கருத்துக்களை தமது சொற்பொழிவில் வழங்கினார்.

முஜாஹிட் யூசுப் ரவா

கைதட்டல் மற்றும் பாராட்டுதல் பெறும் நோக்கத்தோடு மற்ற மதங்களை கேலி செய்து சொற்பொழிவாற்ற அவருக்கு அதிகாரம் இல்லை. அவரது இந்த நாகரிகமற்ற நடவடிக்கையினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம் நாட்டின் தேசிய நிந்தனை சட்டம்  மீறப்பட்டுள்ளது.

இப்பொறுப்பற்ற சொற்பொழிவை கண்டித்து நாடு தழுவிய அளவில் மலேசிய இந்துதர்ம மாமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர். மலேசியா பல்வேறு சமயங்களைச் சார்ந்த பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு திருநாடு. நமது இத்தாய் திருநாட்டில் நம் முன்னோர்கள் கடைப்பிடித்த நம்பிக்கைகளையும் கலாச்சாரத்தையும் பேணிக்காத்து நம்மிடையே இருக்கும் வேற்றுமைகளை மதித்து ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நமது இந்த கோரிக்கையையும் நாட்டின் நல்லிணக்க ஒற்றுமை உணர்வையும் கருத்தில்கொண்டு மலேசிய உள்துறை அமைச்சு தீவிரமாக உரிய உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய இந்துதர்ம மாமன்றம் கேட்டுக் கொள்வதோடு மலேசியாவில் இருக்கும் இதர ஏழு தலையாய இந்து சமய இயக்கங்களோடு இணைந்து கேட்டுக்கொள்கின்றனர்.