புத்ரா ஜெயா – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா பிந்தி மன்சோர் இன்று புதன்கிழமை காலை 9.50 மணியளவில் 1எம்டிபி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
இதற்கிடையில் ரோஸ்மாவின் மகன் ரிசா அசிசும் நேற்று செவ்வாய்க்கிழமை புத்ரா ஜெயா ஊழல் தடுப்பு ஆணையத்தில் காணப்பட்டார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.