Home இந்தியா தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள்

தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள்

1035
0
SHARE
Ad

புதுடில்லி – அடுத்த வருடம் தனது 5 ஆண்டுகால பதவிக் காலத்தை பாஜக நிறைவு செய்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கவிருக்கும் நிலையில் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தத் தேர்தல்கள் நடைபெறுவதாலும், நாட்டின் வெவ்வேறு திசைகளில் அமைந்துள்ள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் என்பதாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோடியாக இந்த சட்டமன்றத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன.

மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கான தேர்தல்கள் நவம்பர் 28-ஆம் தேதியும், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கான தேர்தல்கள் டிசம்பர் 7-ஆம் தேதியும், சட்டிஸ்கார் மாநிலத்துக்கான தேர்தல் நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறும்.