Home நாடு 31 ஆயிரம் வாக்குகள் பெற்று அன்வார் வெற்றி

31 ஆயிரம் வாக்குகள் பெற்று அன்வார் வெற்றி

1393
0
SHARE
Ad
கடற்கரையோரம் மிதக்கும் குப்பைகளை தினமும் காலை மெதுவோட்டப் பயிற்சிக்குப் பின்னர் அகற்றும் அன்வார்

போர்ட்டிக்சன் – (இரவு 9.20 மணி நிலவரம் – அதிகாரபூர்வமற்ற தகவல்கள்) போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அன்வாருக்கு இதுவரையில் 31,064 வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் பாஸ் கட்சியின் வேட்பாளர் முகமட் நசாரி மொக்தார் 7,429 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

சுயேச்சை வேட்பாளர்களில் முகமட் இசா சமாட் மட்டும் 4,224 வாக்குகள் பெற்றிருக்கிறார். மற்ற சுயேச்சை வேட்பாளர்கள் மோசமான அளவில் வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினர்.

அன்வாருக்கு எதிராக ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டுகளை சுமத்திய சைபுல் புகாரி 112 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி நிலையில் வந்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மொத்த வாக்காளர்களில் 58.3 விழுக்காடு வாக்காளர்கள் மட்டுமே இன்றைய தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர்.