Home நாடு சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான பரிசு

சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான பரிசு

1249
0
SHARE
Ad

மூவார் – ஜோகூர் மாநில அளவில் சிறந்த முறையில் பணியாற்றிய பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா கடந்த செவ்வாய்க்கிழமை அக்டோபர் 16-ஆம் தேதி மூவார் நகரில் நடைபெற்றது.

இம்முறை சிகாமட் மாவட்டத்தைச் சார்ந்த சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாநில அளவிலான (Cluster School) குழுவகப் பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் புறப்பாடம் மற்றும் விளையாட்டுத் துறையில் முதல் நிலையில் வெற்றி பெற்று தேசிய நிலையிலான போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

விருது பெறும் சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி பிரேமா

Anugerah Kokurikulum Cemerlang Kategori Sekolah Kluster என்ற பிரிவுக்கான விருதை சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளி (SJKT SUNGAI MUAR) பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

மூவார் தமிழ்ப் பள்ளியின் சார்பாக அதன் தலைமையாசிரியர் திருமதி பிரேமா அவர்கள் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப சிறிய பள்ளியாக இருந்தாலும் மூவார் தமிழ்ப்பள்ளி சிறப்பான சாதனை படைத்துள்ளது.

இதே நிகழ்ச்சியில் மாநில அளவில் சிறந்த புறப் பாடத்திட்டத்திற்காகவும் விளையாட்டுத் துறைக்காகவும் வழங்கப்படும் Anugerah Emas Kokurikulum JPNJ 2018 என்ற விருது மொத்தம் 10 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டன. அதில் 3 விருதுகள் தமிழ்ப்பள்ளிகளுக்கு கிடைத்தன. அந்த விருதுகளைப் விருதுகளைப் பெற்ற பள்ளிகள் பின்வருமாறு:-

1. மாசாய் தமிழ்ப் பள்ளி (SJKT MASAI)
2. ரீனி தோட்டத் தமிழ்ப் பள்ளி (SJKT LADANG RINI)
3. தாமான் துன் அமீனா தமிழ்ப் பள்ளி (SJKT TAMAN TUN  AMINAH)