ஆனால் பிற்பகல் 3.25 மணியளவில் ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகம் வந்தடைந்த நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா இன்றிரவு அங்கேயே தடுத்து வைக்கப்பட்டு, நாளைக் காலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இர்வான் செரிகார் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை வியாழக்கிழமை (அக்டோபர் 25) நஜிப் மற்றும் இர்வான் செரிகார் இருவரும் கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ஒப்புதல் அளித்துள்ளார்.
நஜிப் நாளை நேரடியாக நீதிமன்றத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1எம்டிபி கடன்கள் தொடர்பாக, இண்டர்நேஷனல் பெட்ரோலியம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் கம்பெனி (International Petroleum Investment Co -IPIC) என்ற நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட தொகைகள் தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே, நஜிப் பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் வேளையில், இர்வான் செரிகார் அப்துல்லா குற்றம் சாட்டப்படுவது இதுவே முதன் முறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.