Home நாடு இர்வான் செரிகார் இல்லத்தில் அதிரடி சோதனை

இர்வான் செரிகார் இல்லத்தில் அதிரடி சோதனை

787
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ இர்வான் செரிகார் அப்துல்லாவின் இல்லத்தில் அந்த ஆணையத்தினர் இன்று அதிரடியாக நுழைந்து சோதனைகள் மேற்கொண்டனர்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வாக்குமூலம் வழங்க ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்த இர்வான் செரிகார் பின்னர் மாலை 4.30 மணியளவில் ஆணைய அதிகாரிகளால் புத்ரா ஜெயா பிரிசிண்ட் 8 என்ற வளாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அந்த இல்லத்திலிருந்து ஒரு பெட்டி மற்றும் இர்வானின் இரண்டு ஜோடி ‘கோட்’ ஆடைகளுடன் ஊழல் தடுப்பு ஆணையத்தினர் வெளியேறினார்கள்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசாங்கத்திற்குச் சொந்தமான நிதியில் முறைகேடுகள் புரிந்ததற்காக இர்வான் செரிகார் மற்றும் நஜிப் துன் ரசாக் இருவரும் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர் என்றும் ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்திருக்கிறது.