கோலாலம்பூர் – இங்கு ஜாலான் துன் ரசாக்கில் அமைந்துள்ள வணிகக் குற்றப் பிரிவுக்கான தலைமையகத்திற்கு 1எம்டிபி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்த நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் சுமார் 3 மணிநேர விசாரணைக்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
ரோஸ்மா இன்று காலை 9.45 மணியளவில் வணிகக் குற்றப் பிரிவுக்கான காவல் துறை தலைமையகம் வந்து சேர்ந்தார்.
அவருடன் அவரது முதல் கணவரின் மகன் ரிசா அசிஸ் மற்றும் நஜிப்பின் மகன் முகமட் நோராஷ்மான் ஆகியோரும் உடன் வந்தனர்.
அம்லா எனப்படும் கள்ளப் பணப் பரிமாற்றங்களை விசாரிக்கும் இலாகாவினர் ரோஸ்மாவை விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
ரோஸ்மாவுடன் அவரது வழக்கறிஞர்களும் வந்திருந்தனர்.