Home உலகம் பிரேசில்: கத்தியால் குத்தப்பட்ட போல்சோனாரோ வெற்றி!

பிரேசில்: கத்தியால் குத்தப்பட்ட போல்சோனாரோ வெற்றி!

1094
0
SHARE
Ad

ரியோ டி ஜெனிரோ – நாடு முழுமையிலும் எதிர்பார்க்கப்பட்டபடி கத்திக் குத்துக்கு ஆளான அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜேர் போல்சோனாரோ பிரேசில் அதிபர் தேர்தலில்  வெற்றி பெற்றார். 

இரண்டாவது சுற்று வாக்களிப்பில் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் போல்சோனாரோ 55 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னாண்டோ 45 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். பெர்னாண்டோ இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்.

“ஊழலை ஒழிப்பேன், குற்றச் செயல்களைக் குறைப்பேன்” என்ற தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின் போது முன் வைத்து பிரச்சாரம் செய்த போல்சோனாரோ வெற்றி பெற்றது பிரேசிலின் புதிய அரசியல் அத்தியாயத்துக்கு வழி வகுத்துள்ளது.

#TamilSchoolmychoice

இரண்டாவது சுற்று வாக்களிப்பு போல்சோனாரோ மற்றும் பெர்னாண்டோ ஹட்டாட் ஆகிய இருவருக்கும் இடையில் மட்டுமே நடைபெற்றது. முதல் சுற்றுப் போட்டியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

200 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் வரலாறு காணாத அளவில் நடைபெற்ற கடுமையான போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் போல்சோனாரோ முன்னாள் இராணுவத்தில் கேப்டன் பதவி வகித்த உயர் அதிகாரியுமாவார்.