Home நாடு ஷாபி அப்டாலே அதிகாரபூர்வ முதலமைச்சர் – நீதிமன்றம் தீர்ப்பு

ஷாபி அப்டாலே அதிகாரபூர்வ முதலமைச்சர் – நீதிமன்றம் தீர்ப்பு

1175
0
SHARE
Ad

கோத்தாகினபாலு – 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் சபா முதலமைச்சராக வாரிசான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என முன்னாள் சபா முதலமைச்சர் மூசா அமான் தொடுத்த வழக்கை இன்று  கோத்தாகினபாலு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஷாபி அப்டாலே சபாவின் அதிகாரபூர்வ முதல்வர் என்றும் கோத்தா கினபாலு நீதிமன்றம் உறுதி செய்தது.

மே 12-ஆம் தேதி ஷாபி அப்டாலை முதலமைச்சராக சபா ஆளுநர்  துன் ஜூஹார் மஹிருடின் நியமனம் செய்தது செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

#TamilSchoolmychoice

மேலும் சபா ஆளுநர் ஜூஹாருக்கும், ஷாபி அப்டாலுக்கும் 30 ஆயிரம் ரிங்கிட் நஷ்ட ஈடு மூசா அமான் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.