Home நாடு “588 மில்லியன் திருப்பித் தாருங்கள்” – கோல்ட்மேன் நிறுவனத்திற்கு குவான் எங் கோரிக்கை

“588 மில்லியன் திருப்பித் தாருங்கள்” – கோல்ட்மேன் நிறுவனத்திற்கு குவான் எங் கோரிக்கை

1162
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து தரகுக் கட்டணமாக (கமிஷன்) வசூலித்த 588 மில்லியன் அமெரிக்க டாலரை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் திருப்பித் தர வேண்டுமென நிதியமைச்சர் லிம் குவான் எங் கோரிக்கை விடுத்துள்ளார்.

2012 முதல் 2013 வரை 1எம்டிபி மூலம் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் பத்திரங்களை (bonds) வெளியிடுவதற்கு 588 மில்லியன் அமெரிக்க டாலர் தரகுக் கட்டணமாக கோல்ட்மேன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

1எம்டிபி விவகாரத்தில் கோல்ட்மேன் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் பகிரங்கமாக சட்டத்தை மீறினர் என நேற்று புதன்கிழமை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் சோலமன் ஒப்புக் கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் லிம் இவ்வாறு கூறியதாக மலாய் மெயில் ஊடகத்தின் செய்தி தெரிவித்தது

கடந்த வாரத்தில் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவர் மீதும், மறைந்து வாழும் வணிகர் லோ தெக் ஜோ மீதும் அமெரிக்க நீதித்துறை இலாகா நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

அமெரிக்கரான டிம் லெய்ஸ்னெர் மற்றும் மலேசியரான ரோஜர் இங் ஆகிய இருவரும் அந்த கோல்ட்மேன் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களாவர். டிம் லெய்ஸ்னெர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்டு தான் பெற்ற தரகுப் பணத்தைத் திருப்பித் தர ஒப்புக் கொண்டார்.

ரோபர்ட் இங் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்க அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இந்தக் கடன் பத்திரங்கள் மூலம் 1எம்டிபி திரட்டிய நிதியிலிருந்து ஏறத்தாழ 2.62 பில்லியன் ரிங்கிட் முறைகேடாகக் கையாளப்பட்டது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.