Home நாடு மஇகா: புதிய தலைமைச் செயலாளர் வேள்பாரி – பொருளாளர் அம்ரிட் கவுர்

மஇகா: புதிய தலைமைச் செயலாளர் வேள்பாரி – பொருளாளர் அம்ரிட் கவுர்

1230
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று பிற்பகலில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தைத் தொடர்ந்து நியமனப் பதவிகளுக்கான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மஇகா தேசியத் தலைவர் டான்ன்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இந்தப் புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

இதுவரையில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த டத்தோ எஸ்.எஸ்.இராஜகோபாலுக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலாளராக டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு நியமிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

புதிய பொருளாளராக டத்தோ அம்ரிட் கவுட் மஞ்சிட் சிங் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய தகவல் பிரிவுத் தலைவராக மஇகா சிப்பாங் தொகுதித் தலைவர் (சிலாங்கூர்) வி.குணாளன் நியமனம் பெற்றுள்ளார்.

மேலும் கீழ்க்காணும் 9 பேர் மத்திய செயலவை உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்:

  1. முருகவேலு சுப்பிரமணியம்
  2. டத்தோ மருதமுத்து சுப்பிரமணியம்
  3. ஏ.கே.இராமலிங்கம்
  4. டத்தோ ஆர்.பாலகிருஷ்ணன்
  5. டத்தோ பெரு.கருப்பன்
  6. டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு
  7. டத்தோ என்.முனியாண்டி
  8. என்.கோபாலகிருஷ்ணன்
  9. டத்தோ அம்ரிட் கவுர் மஞ்சிட் சிங்