Home நாடு சீ பீல்ட் ஆலயத்திற்கு சரவணன் வருகை தந்தார்

சீ பீல்ட் ஆலயத்திற்கு சரவணன் வருகை தந்தார்

1248
0
SHARE
Ad

சுபாங் – சர்ச்சைக்குரிய சீ பீல்ட் ஆலய வளாகத்திற்கு நேற்று திங்கட்கிழமை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான நேரடியாக வருகை தந்து அங்குள்ள நிலைமையைக் கண்டறிந்தார்.

ஆலயத்தில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் மற்றும் மக்களிடையே நடந்த சம்பவங்கள் குறித்த விவரங்களை சரவணன் கேட்டறிந்தார்.

பொது அமைதிக்கும், நலனுக்கும் ஊறு விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அதே நேரத்தில் திங்கட்கிழமை அதிகாலையில் ஆலயத்திற்கு வருகை தந்தவர்கள் யார் என்பது போன்ற விவரங்களை, அங்கிருந்த கார்கள் மற்றும் அவற்றின் பதிவு எண்கள் மூலம் காவல் துறையினர் கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சரவணன் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

நேற்று காலையில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் சீ பீல்ட் ஆலயத்திற்கு நேரில் வருகை தந்து மஇகா சார்பாக 20 ஆயிரம் ரிங்கிட் உதவி நிதி அறிவித்தார்.