Home நாடு 1எம்டிபி: ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடர்கிறது

1எம்டிபி: ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையைத் தொடர்கிறது

855
0
SHARE
Ad

புத்ராஜெயா: 1எம்டிபியின் இறுதிக் கணக்கறிக்கையில் உண்மைகளை மறைத்து மாற்றி அமைத்ததற்காகவும், அரசாங்க உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகார அத்துமீறல்கள் காரணமாகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புலனாய்வாளர்கள் பல்வேறு வகையான குற்றங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

முன்னாள் அரசாங்க அதிகாரிகள் பலர் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முதன்மைச் செயலாளர், டான்ஸ்ரீ சுக்ரி சாலே, முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ அலி ஹம்சா, முன்னாள் அரசாங்க தலைமைக் கணக்காய்வாளர் டான்ஶ்ரீ அம்பிரின் புவாங் மற்றும் 1எம்டிபியின் நிருவாக அதிகாரி அருள் கந்தா கந்தசாமி ஆகியோர் இவ்விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதற்கிடையே, நேற்று புதன்கிழமை, ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் டான்ஶ்ரீ சுல்கிப்ளி அகமட், 1எம்டிபி கணக்கறிக்கை குறித்த விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவருடனான இவ்விசாரணை சுமார் 5 மணி நேரத்திற்கு நீடித்தது.

#TamilSchoolmychoice

இவர் 2016-ல் டிசம்பர் 1-ம் தேதியன்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் ஜூலை 2021 வரை பதவி வகிக்க வேண்டியிருந்தும், கடந்த மே மாதம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கில் தாம் முக்கிய சாட்சி இல்லை என்றும், இதற்கு முன்னர் அழைக்கப்பட்ட 15 பேர்களில் தாமும் ஒருவர் என்றும் சுல்கிப்ளி கூறினார்.