Home வணிகம்/தொழில் நுட்பம் ஹூவாவெய் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி கைது

ஹூவாவெய் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி கைது

1093
0
SHARE
Ad

அமெரிக்கா: உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான, ஹூவாவெய் (Huawei) தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொவ் ( Meng WanZhou) கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாவெய் நிறுவியவரின் மகள் டிசம்பர் 1-ம் தேதி கனடாவின் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது கைது நடவடிக்கைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆயினும், ஈரானுக்கு எதிராக தடைகளை இந்நிறுவனம் மீறியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில், அமெரிக்கா புலனாய்வுகளை மேற்கொண்டு வருகிறது என நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

இக்கைது நடவடிக்கையானது, மனித உரிமை மீறலாக இருக்க வாய்ப்புள்ளது என்று சீனா தெரிவிக்கும் வேளையில், அவர்களை அமெரிக்கா மற்றும் கனடா விடுவிக்க வேண்டுமென கோரியுள்ளது.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தை வணிகத்தில் பின்னுக்கு தள்ளிய ஹூவாவெய், சாம்சுங்கிற்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமாக உருமாறியது. மேற்கத்திய நாடுகளில் ஹூவாவெய் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளுடன் இக்கைதானது ஒத்துப்போவதாகவும் நம்பப்படுகிறது.