Home நாடு சீ பீல்ட்: கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல!

சீ பீல்ட்: கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல!

1788
0
SHARE
Ad

ஷா அலாம்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர் அனைவரும் குற்றம் சாட்டப்படமாட்டார்கள் என சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார். 

இதற்கு முன்னர் செய்திருந்த குற்றங்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அப்படி அவர்கள் இக்கலவரத்தில் சம்பந்தப்படவில்லை என்றால், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர் கூறினார்.

இதற்கு முன்னர், காவல் துறையினர் தவறுதலாக பலரைக் கைது செய்து விட்டனர் என்ற, சுவாமி ராமாஜியின் கருத்திற்கு மஸ்லான் இவ்வாறு பதில் அளித்தார்.  தற்போது, இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 102 பேர்களை காவல் துறை தடுத்து வைத்திருப்பதாகவும்,  தாங்கள் 66 பேர்களிடமிருந்து தகவல் பெறுவதற்காக காத்திருப்பதாகவும், அவர்களில் இதுவரை இருவர் மட்டுமே முன்வந்து தகவலை தெரிவித்திருப்பதாகவும் மஸ்லான் கூறினார்.

#TamilSchoolmychoice